8 Tips to keep your Bike in Good condition - உங்கள் பைக்கை நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்ள 8 வழிமுறைகள்

Image result for motorbike

  பைக் வாங்கியதில் இருந்து சில மாதங்கள் மட்டுமே அதை பராமரிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோர்க்கு இருக்கிறது, இவ்வாறு பராமரிப்பு இல்லாத வாகனங்கள் விரைவில் பழுதாகிவிடும் சிலசமயம் விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடும், எனவே இந்த தொகுப்பில் உங்கள் பைக்கை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று 8வழிமுறைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

1. Tyre Condition - டயரின் நிலை:

Image result for motorbike tyres

     தினமும் டயர்களின் காற்று அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும், வாரம் ஒருமுறை தாயாரின் தேய்மானத்தை கவனித்துக்கொள்ளவேண்டும், தினமும் டயரில் முள் ஆணி போன்றவைகளை கவனித்து அகற்ற வேண்டும்.
இதனால் டயர்கள் வீணாவதில்லை இருந்தும் விபத்துகள் ஏற்படுவதிலிருந்து தடுக்கிறது.

2. Engine oil Check - இன்ஜின் ஆயில் பராமரிப்பு:



Image result for superbike engine oil filling

     உங்கள் பைக்கின் இரத்தம் இன்ஜின் ஆயில் தான், இன்ஜின் உராய்வுகளை தடுக்கிறது, அவ்வப்போது இன்ஜின் ஆயில் அளவை சரிபார்க்க வேண்டும், ஆயில் கசிவுகளை சரிசெய்ய வேண்டும், இவ்வாறு செய்யவிடில் இன்ஜின் பழுதாகிவிடும் மற்றும் அதிக எரிபொருள் செலவாகும்.

3. Clean Air Filter - காற்று வடியை சுத்தம் செய்தல்

Image result for bike air filter cleaning

     நம்மை சுற்றி உள்ள அதிக தூசியால் பைக் air filterஇல் அதிகம் தூசி படிந்து நாளடைவில் இன்ஜினை பழுதாக்கிவிடும் , அவ்வப்போது Air filterஐ சுத்தம் செய்துகொள்ள வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு மாற்றிவிட வேண்டும்.

4. Clutch Adjustment - க்ளெச்சய் சரிசெய்தல்:

Image result for bike clutch adjustment

     கிளட்ச்சை அதிக இறுக்கமாகவும் அதிக லூசாகவும் வைக்க கூடாது, கிளட்ச் சரி இல்லையென்றால் கியர் ஸ்லிப் ஆகா வாய்ப்புகள் அதிகம் உள்ளது இதனால் அதிக எரிபொருள் செலவாகும்.

5. Engine - இன்ஜின்:

Image result for motor bike engine

     பைக்கின் இதயம் அதோட இன்ஜின் தான், ஒவ்வொரு 1500km இடைவேளையில் carburetorஐ சுத்தம் செய்ய வேண்டும், ஒவ்வொரு 750kM இடைவேளையில் spark plugஐ சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அதன் கண்டிஷனை சரி பார்க்க வேண்டும், ஏதேனும் வித்யாசமான சத்தம் மற்றும் புகை வருதா என்பதையும் கவனித்து கொள்ளவேண்டும்.

6. Chain:

Image result for motorbike chain

     மழைக்காலத்தில் bike சைன்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும், மலை தண்ணி, சேறு போன்றவையால் துருப்புடிக்கவும் பலம் இழக்கவும்  அதிக வாய்ப்புகள் உள்ளன, இதை தவிர்க்க வாரம் ஒருமுறையாவது செயினை சுத்தம் செய்ய வேண்டும் அதுமட்டும் இல்லாமல் செயின் லுபிரிகேஷன் spray பயன்படுத்த வேண்டும்.


7. Surface cleaning - மேல் பாகத்தை சுத்தம் செய்தல்:

Image result for motorbike cleaning

     பைக்கை அவ்வப்போது தொடைத்து தண்ணீரால் கழுவியும் சுத்துதாம் செய்ய வேண்டும்,Polish wax உபயோகிப்பது இன்னும் சிறந்தது , இது உங்கள் பைக்கை பொலிவிழந்து போவதிலிருந்தும் துருப்புடித்து போவதிலிருந்தும் பாதுகாக்கிறது.

8. Miscellaneous Tips - இதர தகவல்கள்:

    Brake Pad, Brake oil, Battery, Fork oil, போன்றவையை அவ்வப்போது சரிபார்த்து கொள்ளவேண்டும்.



மேலும் புதிய தகவலுக்கு MY MOTOR CITY blog ஐ பின்பற்றுங்கள்.




                                                                                        ********நன்றி ********


Comments