4 IMPORTANT UPCOMING FEATURES IN CARS/ இனி வரக்கூடிய கார்களில் இடம்பெறும் 4 முக்கிய அம்சங்கள்!!

   இந்த தொகுப்பில் இனி வரும் காலங்களில் CAR களில் இடம்பெறப்போகும் 4 முக்கிய தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம்.

Image result for FUTURE CAR

  இதில் இடம் பெரும் சில விஷயங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கலாம் ஆனால் பரவலாக அனைவர்க்கும் பயன்படும் வகையில் இருக்காது, ஆனால் எதிர் வரும் காலங்களில் கட்டாயம் இடம் பெரும்.

1. Alternative Fuels / மாற்று எரிபொருள்,



     தற்போது பயன்பட்டு வரும் petrol மற்றும் diesel இயற்கைக்கு பெரும் கேடு தரக்கூடியதாக இருக்கிறது, தவிர்க்கமுடியாத காரணங்களால் பெரும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் உலகநாடுகள் மாற்று எரிபொருள் பெட்ரோல் டீசல் கு நிகராக பயன்பாட்டில் கொண்டுறவ தீவிரம் காட்டி வருகிறது. Tesla கார்கள் முழுமையாக மிசாரத்தால் இயங்க கூடியவை மற்றும் சுற்றுப்புறம் மாசு அடைவதில் இருந்து 100% பாதுகாப்பானது.

   இதற்காக petrol bunk போல அணைத்து இடங்களிலும் charging station அமைக்க வேண்டும், முக்கியமாக மின்சாரம் சூரியன், காற்று, போன்றவைகளால் உற்பத்தி செய்யவேண்டும் ஏனென்றால் இப்பொழுது நிலக்கரி தான் பெருமளவில் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது, இதுவும் சுற்றுப்புறத்திரு தீங்கானதே.

2. Collision Avoidance System / கார்கள் மோதிக்கொள்ளாமல் பாதுகாக்கும் வசதி.
Related image

      சுற்றுசூழல் பாதுகாப்பு ஒருபக்கம் இருக்க, கார்கள் விபத்துக்குள்ளாகி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது, தினமும் இந்தியாவில் 400பேர் விபத்தினால் இறந்துபோகிறார்கள்.

     Volvo XC60 XC90 போன்ற கார்களில் மற்ற கார்களிலும் எதிர் வரும் மனிதர்கள் மீதிதும் மோதிக்கொள்ளாமல் இருக்க LIDAR (laser and Radar) தொழில்நுட்பம் கொண்டுள்ளது, இந்த தொழில்நுட்பத்தை Audi, BMW, Benz போன்ற உயர் சொகுசு கார்களில் இடம்பெற்று வருகிறது, இந்த வசதிகள் சாதாரண கார்களுக்கு வரும் காலங்களில் இடம் பெரும் என எதிர்ப்பாக படுகிறது.

3. High strength low weight body / குறைந்த எடையும் அதிக வலுவும் கொண்ட மேல் பாகங்கள்.

Related image

    கார்களின் எடையை குறைப்பதினால் எரிபொருள் செலவு குறைகிறது மற்றும் நச்சு வெளியேற்றமும் குறைகிறது, இதனால் தற்போது தயாரிக்க படும் கார்களுக்கு எடையை குறைக்கும் நோக்கத்தில் design செய்ய படுகிறது.

   வலுவேதப்பட்ட Carbon fibre மற்றும் Polymer போன்ற பொருன்களால் தயாரிக்கப்படும் கார் பாகங்களால் அதிக வலுவும் குறைங்க எடையும் பெற முடிகிறது, கார் பைக் பந்தைய உலகில் வலுவேதப்பட்ட கார்பன் பைபர் பாகங்கள் தான் உபயோக படுகிறது. இந்த வகை முறைகள் விரைவில் Corvette Z06, Lexus LF-A, BMW M3 போன்ற super ஸ்போர்ட்ஸ் கார்களில் இந்த கார்பன் பைபர் பாகங்கள் உபயோகப்படுத்த பட்டிருக்கிறது, இது விரைவில் மற்ற சாதாரண கார்களுக்கு பயன்பாட்டில் வரும் என எதிர்பக்க படுகிறது.

4. Self driving cars / தானியங்கி கார்கள்.

Image result for self driving cars

    கார்கள் தொழில்நுட்பம் வளந்துகொண்டே வருகிறது அதில் ஒரு பங்கு தான் தானியங்கி கார்கள், Volvo கம்பெனி கார்கள் தன் பாதையில் இருந்து விலகி சென்றாலோ எதிரே உள்ள வாகனத்தில் மோத நேர்ந்தாலோ தானாக steering அசைத்தும் brake அடிச்சும் கார்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறிப்பிட்ட மாடல்களில் கொடுத்து இருக்கிறது. இந்த தொழில்நுற்பதின் வளர்ச்சியே தானியங்கி கார்கள்.

   Google, Apple , Ford , போன்ற பெரும் நிறுவனங்கள் தானியங்கி கார்கள் தயாரித்து சோதனை ஓட்டத்தில் ஈடுபதித்திருக்கிறது, இந்த முயற்சி வெற்றி பெற்றதும் உலகில் பரவலாக பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்ப்பாக படுகிறது.


Comments

Popular posts from this blog

8 Tips to keep your Bike in Good condition - உங்கள் பைக்கை நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்ள 8 வழிமுறைகள்